22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. 'ஆனந்தி' கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு கவனம் பெற்றது. தொடர்ந்து 'அங்காடி தெரு' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அஜித்தின் 'மங்காத்தா', சூர்யாவின் 'சிங்கம் 2' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 'பாவக்கதைகள்' ஆந்தாலஜிக்குப்பிறகு தமிழில் அவர் நடிப்பில் 2 ஆண்டுகளாக படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
மலையாளத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியான 'இரட்ட' படத்தில் நடித்திருந்தார். அஞ்சலி திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது 50வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு 'ஈகை' என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை அசோக் வேலாயுதம் இயக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். க்ரீன் அமியூஸ்மெண்ட் மற்றும் டி3 புரடொக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. தரண் குமார் இசையமைக்கிறார்; பாடல்களை அறிவு எழுதுகிறார். இந்நிலையில், தற்போது படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றி குடைகள் குழுமியிருக்க நடிகை அஞ்சலி தலையில் சிவப்பு நிற துணி போர்த்தியபடி திரும்பி பார்ப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.