மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

அறிமுக இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் நவின் பொலிஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ரதன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்திற்காக ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடுகிறார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் தனுஷ் பாடிய பாடல் வருகின்ற மே 31 அன்று வெளியாகும் என ஒரு ஸ்பெஷல் வீடியோ உடன் அறிவித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் தனுஷே இந்த பாடலை பாடுகிறார். தமிழில் ‛என்னடா நடக்குது', தெலுங்கில் ‛ஹத்தா விதி' என்று இப்பாடலுக்கு தலைப்பு வைத்துள்ளனர்.