லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
தி கேரளா ஸ்டோரி என்ற படம் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தடை போட்டார்கள். அதன் பிறகு படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதை அடுத்து தி கேரளா ஸ்டோரி படத்தை அனைத்து மாநிலங்களும் வெளியிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதோடு இப்படம் இதுவரை 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து தொடர்ந்து ரசிகர்களுடைய ஆதரவினை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த கேரளா ஸ்டோரி படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் ஒரு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்டப்பட்டது உண்மையல்ல. பிரச்சார படங்களுக்கு நான் எப்போதுமே எதிரானவன் என்று கூறி இருக்கிறேன். உண்மை கதை என்று படத்தில் கூறினால் மட்டும் போதாது. அது உண்மையாகவும் இருக்க வேண்டும்' என்று கருத்து தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.