2018 பட இயக்குனருடன் இணையும் ஆர்யா | தர்ஷன், காளி வெங்கட் நடிக்கும் ஹவுஸ் மேட்ஸ் | டாக்டர்களே இல்லை : அரசு மருத்துவமனையில் டென்ஷனாகிய நடிகர் கஞ்சா கருப்பு | பிப்., 28ல் வெளியாகிறது சுழல் 2 வெப்தொடர் | விஜய் தேவரகொண்டா பட டீசருக்கு குரல் கொடுக்கும் சூர்யா | 20வது திருமணநாளை மனைவியுடன் கொண்டாடிய மகேஷ் பாபு | நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது |
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக முதன்மை கதாபாத்திரத்தில் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது புதுமுக இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ரகு தாத்தா'. இந்த படத்தை 'கேஜிஎப்', 'காந்தாரா' போன்ற படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளதை கேக் வெட்டி கொண்டாடி போட்டோ உடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.