தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

சென்னை: கில்லி படத்தில் நடித்திருக்கும் நடிகர் தன்னுடைய 60-வயதில் 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கில்லி படத்தில் போலீஸ் அதிகாரியாகவும், கதாநாயகன் விஜய்ககு தந்தையாகவும் நடித்திருப்பவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி . இவர் இந்தி,தெலுங்கு, தமிழ், கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் குணசித்திர நடிகராகவும் வில்லன் நடிகராகவும் நடித்து வருகிறார். கடந்த 1995-ல் ட்ரோஹ்கால் படத்தில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்.
60 வயதாகும் ஆஷிஷ் வித்யார்த்தி தொழிலதிபரான ரூபாலி பருவா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு உள்ளார். இவர் அசாமை சேர்ந்தவர். ரூபாலி பருவா முன்னாள் நடிகையான சகுந்தலா பருவாவின் மகளாவார்.
இந்த புதிய ஜோடி நண்பர்கள் முன்னிலையில் கோல்கட்டாவில் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி நடந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இவர்களது திருமண போட்டோக்கள் சமூக வலை தளத்தில் வெளியாகி உள்ளது.இருப்பினும் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி பெயர் ராஜோஷி வித்யார்த்தி. இவர் 1993-ல் டைம்ஸ் எப்.எம் என்ற எப்.எம். ஸ்டேஷனில் ரேடியோ ஜாக்கியாகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் இந்தி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
ஆஷிஷ் வித்யார்த்தி ராஜோஷி வித்யார்த்தியின் தம்பதிக்கு பிறந்தவர் ஆர்த் வித்யார்த்தி. இவர் தற்போது அமெரிக்காவில் படித்து வருகிறார். 23 வயதான ஆர்த் வித்யார்த்தி தந்தையின் இரண்டாவது திருமணத்திற்கு ஆதரவளித்துள்ளதாக கூறப்படுகிறது.




