காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
கன்னடத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான சுதீப், தமிழில் 'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்னர் விஜய் நடித்த 'புலி' படத்திலும் வில்லனாக நடித்தார். பின்னர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த 'முடிஞ்சா இவன புடி' படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படம் வெளிவந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
சுதீப் நடித்து கன்னடத்தில் தயாரான 'விக்ராந்த் ரோணா' கடந்த வருடம் பான் இந்தியா படமாக வெளிவந்தது. அடுத்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் தாணு தயாரிக்க உள்ள படத்தில் சுதீப் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இது பற்றிய அறிமுக வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டனர். சுதீப்பின் 46வது படமாக இது உருவாக உள்ளது. விரைவில் படத்தின் டீசருடன் வருவதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்கள். இப்படமும் ஒரு பான் இந்தியா படமாகத்தான் வெளிவரும் எனத் தெரிகிறது.
கடந்தாண்டு செல்வராகவன் இயக்க தனுஷ் நடித்த 'நானே வருவேன்' படத்திற்குப் பிறகு தாணு தயாரிக்கும் படம் இது. அவர் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள 'வாடி வாசல்' படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது இன்னமும் தெரியாத நிலையில் உள்ளது. வெற்றிமாறன் இயக்க சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் அது.