ஏமாற்றிய 'ஏஸ்', மயக்க வைக்குமா 'மதராஸி' | தமிழில் வரவேற்பு இல்லை என்றாலும் 100 கோடி வசூலில் 'குபேரா' | 'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் |
நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் ஹரி இயக்கும் தனது 34வது படத்தில் விஷால் நடிக்கவுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் ஜூன் முதல் வாரத்தில் துவங்குகிறது. படப்பிடிப்பை துவங்கும் முன்பே இந்த படத்திலிருந்து கிளிம்ஸ் வீடியோ வெளியாகும் என்கிறார்கள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் யோகி பாபு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகை அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.