'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' |
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தங்கலான். பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பா.ரஞ்சித் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளிவந்த கிளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது இப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளது. " இந்த படம் 19ம் நூற்றாண்டில் கே.ஜி.எப் பகுதிகளில் வாழ்ந்தவர்களின் கதை. அப்போது அவர்கள் சந்தித்த இன்னல்களை குறித்து இப்படம் பேசும். இந்த படத்திற்காக கடந்த 6, 7 மாதங்களாக விக்ரம் வேறு எந்த படங்களிலும் நடிக்க செல்லவில்லை. 105 நாட்கள் படப்பிடிப்பு நடந்து தற்போது நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு தான் மீதம் உள்ளது. உலகத் தரத்தில் இந்த படம் உருவாகி வருகிறது" என்றார் ரஞ்சித்.