''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கோடை விடுமுறையின் கடைசி வாரத்தில் வந்துவிட்டோம். இன்னும் ஒரு வாரத்திற்குள் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்த வார இறுதி விடுமுறை நாட்களிலேயே பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுக்குத் தேவையானவற்றை வாங்க கடைகள் பக்கம் சென்றுவிடுவார்கள். அதனால், தியேட்டர்கள் பக்கம் எவ்வளவு பேர் வருவார்கள் என்பது சந்தேகம்தான். மேலும், விடுமுறைக்காக ஊர்களுக்குச் சென்றவர்கள் இந்த வார இறுதியில் மீண்டும் அவரவர் வசிப்பிடங்களுக்குத் திரும்புவதிலும் பிஸியாக இருப்பார்கள்.
அதனால், இந்த வாரம் வெளியாகும் புதிய படங்களுக்கு கொஞ்சம் சிக்கல் இருக்கத்தான் செய்யும். அதைத் தெரிந்தேதான் பலரும் தங்களது படங்களை இந்த வாரம் வெளியிடுவதை தவிர்த்துள்ளார்கள் போலிருக்கிறது. அப்படியும் இந்த வாரம் நாளை மறுநாள் மே 26ம் தேதி வெள்ளியன்று இதுவரையிலும் மூன்று படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான முன்பதிவுகளும் நடந்து வருகின்றன.
“காசேதான் கடவுளடா, கழுவேத்தி மூர்க்கன், தீராக் காதல்” ஆகிய படங்கள் மே 26 அன்று வெளிவருகின்றன.
கண்ணன் இயக்கத்தில், ராஜ் பிரதாப் இசையமைப்பில், சிவா, யோகி பாபு, கருணாகரன், புகழ், பிரியா ஆனந்த், ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'காசேதான் கடவுளடா'. இதற்கு முன்பு சில முறை வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு தள்ளிப் போன படம். இந்த முறை கண்டிப்பாக வந்துவிடும் என எதிர்பார்க்கலாமா ?. 1972ம் ஆண்டு வெளிவந்த படத்தை மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். அந்தப் படம் ஒரு கிளாசிக் நகைச்சுவைப் படம். அப்படிப்பட்ட படத்தின் பெயரை இந்த மறு உருவாக்கத்தில் கெடுக்காமல் எடுத்திருக்க வேண்டும் என்பதே பழைய சினிமா ரசிகர்களின் ஆசை.
சை கவுதம் ராஜ் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், அருள்நிதி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. ஜோதிகா நடித்த 'ராட்சசி' படத்தை இயக்கியவர் கௌதம் ராஜ். இந்தப் படத்தின் டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பு படத்துக்கும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் அருள்நிதிக்கு இதற்கு முன்பு வந்த சில படங்கள் பெயரை வாங்கித் தரவில்லை. அதை இந்தப் படம் சரி செய்யும் என்று அவரும் நம்பிக்கையுடன் இருக்கிறார். சினிமா பிரபலங்களுக்கான சிறப்புக் காட்சி ஏற்கெனவே நடந்துவிட்டது. பல இயக்குனர்கள் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார்கள்.
ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில், சித்துகுமார் இசையமைப்பில், ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'தீராக் காதல்'. 'அதே கண்கள், பெட்ரோமாக்ஸ்' படங்களை இயக்கியவர் ரோஹின். படத்தின் பெயரே இது ஒரு தீவிரமான காதல் கதை என்பதை புரிய வைத்துவிடுகிறது. ஜெய்க்கு 'ராஜா ராணி' போன்ற ஒரு வெற்றியை இந்தப் படம் கொடுக்குமா, அடுத்தடுத்து படங்கள் வந்தாலும் வெற்றி பெறத் தடுமாறும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வெற்றியைத் தருமா என்பது எதிர்பார்ப்பு.
இந்த மூன்று படங்களைத் தவிர திடீரென வேறு சில படங்களும் வெளிவந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.