நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'தீராக் காதல்'. இப்படம் வருகிற 26ம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாகிறது.
இதையொட்டி நடந்த படத்தின் அறிமுக நிகழ்வில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது: எல்லா கதைக்கு பின்னாடியும் சில கதைகள் இருக்கும். அதே போல் எனக்கும் இயக்குநர் ரோகினுக்கும், இரண்டு வருடக் கதை உண்டு. நாங்கள் பல நாட்களுக்கு முன்னதாகவே படம் பண்ண வேண்டியது, எங்களின் கதையைக் கேட்டு அதை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. எனது நீண்ட நாள் நண்பர் தமிழ்குமரன் லைகா நிறுவனத்தில் தற்போது உயர் அதிகாரியாக இருக்கிறார். அவருக்கு நான்கைந்து கதைகள் அனுப்பி வைத்தேன் அதில் இந்த கதையும் ஒன்று.
இந்த படத்திற்கு நல்ல தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு நானும் இயக்குனர் ரோகின் வெங்கடேசனும் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றோம். செல்லும் வழியில் தமிழ்குமரன் போன் செய்து இந்த படத்தை நாம் தயாரிக்கலாம் என்றார்.
இந்தப்படம் மனதிற்கு இதமான ஒரு அனுபவத்தை அனைவருக்கும் அளிக்கும், ஜெய் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் ஒரே முடிவாக இருந்தார், ஏன் என்று தெரியவில்லை. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஷிவதாவின் தீவிர ரசிகை நான். படத்தில் ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருந்தது. அனைவரும் அதனை ரசிப்பீர்கள், ஒட்டு மொத்த படக்குழுவினரும் நல்ல உழைப்பைக் கொடுத்துள்ளார்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.