‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
சூப்பர் சிங்கர் பிரபலங்களான செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி தம்பதியினர், இன்று சினிமாவிலும் பின்னணி பாடுவது, நடிப்பது என கலக்கி வருகின்றனர். அதிலும் ராஜலெட்சுமி ஹீரோயினாக அறிமுகமாகும் லைசன்ஸ் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கிடையில் இன்ஸ்டாகிராமிலும் செலிபிரேட்டியாக வலம் வரும் ராஜலெட்சுமி அடிக்கடி போட்டோஷூட், ரீல்ஸ் வீடியோ என ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்றைய தினம் 11வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் ராஜலெட்சுமி தனது கணவரின் காதலை நெகிழ்ந்து உருக்கமான பதிவு போட்டுள்ளார். பதிலுக்கு செந்தில் கணேஷும் 'இறைவன் தந்த வரமே! என்னை உன்னை அன்றி யார் அறிவார்' என தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். இருவருக்குமிடையேயான புரிதலையும், காதலையும் ரசிகர்கள் பாராட்டி வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.