தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? |
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இப்போது வரை முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். அதோடு தொழில்நுட்ப ரீதியாக தமிழ் சினிமாவில் பல அறிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். மேலும் மூன்றாம் பிறை, இந்தியன், நாயகன் போன்ற படங்களுக்கு தேசிய விருது பெற்ற கமலஹாசன், தேவர் மகன் படத்தில் நடித்து மாநில மொழி படத்துக்கான தேசிய விருது வென்றார். அதோடு பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு மே 27ம் தேதி அபுதாபியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கமல்ஹாசனுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. மேலும், விக்ரம் படத்தை அடுத்து தற்போது இந்தியன்-2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அடுத்து மணிரத்னம் இயக்கும் தனது 234வது படத்தில் நடிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.