ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
சென்னை: எஸ்.பி.பி., சித்ரா ஆகியோரின் 2,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ராஜ்-கோட்டி காலமானார்.
ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் டி.வி.ராஜ். இவரின் இயற்பெயர் தோட்டக்குரா சோமராஜூ. இவர் கோட்டி என்பவருடன் இணைந்து சினிமா துறையில் பணியாற்றி வந்தார்.
ராஜ்-கோட்டி இசையமைப்பாளர்கள் கிட்டத்தட்ட 180 படங்களுக்கு இசையமைத்து உள்ளனர். இவர்களின் இசையில் எஸ்.பி.பி., மற்றும் சித்ரா சுமார் 2,500 பாடல்களை பாடி உள்ளனர். 1994 ம் ஆண்டு நாகார்ஜூன் நடிப்பில் வெளியான ஹாய் பிரதமர் படத்திற்கான சிறந்த இசையமைப்பாளர்கள் என்ற நந்தி விருதை ராஜ்-கோட்டி பெற்றனர். சூழ்நிலை மற்றும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக ராஜ்-கோட்டி இணை பிரிந்தது. சமீபத்தில் நடைபெற்ற நேர் காணல் ஒன்றில் மீண்டும் இருவரும் இணைவதாக அறிவித்தனர்.
ராஜ்- கோட்டி இணையில் ஏ.ஆர்.ரகுமான் சாப்ட்வேர் இன்ஜினியராக நீண்ட காலம் பணியாற்றி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் ராஜ் மற்றும் கோட்டியை தனது சகோதரர்கள் என்றும் அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜ் திடீரென மரணம் அடைந்தார். ராஜ் மரணம்இசையமைப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இவரின் மறைவுக்கு பல்வேறு இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள்,திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.