கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
நடிகர் விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ‛லியோ' படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 68வது படத்தை இயக்குபவர்கள் பட்டியலில் அட்லீ, கார்த்திக் சுப்பராஜ், கோபிசந்த் மாலினேனி ஆகிய இயக்குனர்களின் பெயர்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அது அனைத்தும் வதந்திகள், விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு தான் இயக்குகிறார் என்ற செய்தி கடந்த சில நாட்களாக வெளியாகி வந்தது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தனது 68வது படத்தை ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு வெங்கட்பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
விஜய் நடித்து 2003ல் வெளியான புதிய கீதை படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா அதன்பிறகு சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் கைகோர்த்துள்ளார்.