கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
பேஷன் ஷோக்கள், திரைப்பட விழாக்கள் ஆகியவற்றில் மாடல்கள், நடிகைகள் விதவிதமான ஆடைகள் அணிந்து கலந்து கொள்வது வழக்கம். சில சமயம் நீளமான ஆடைகளை அணியும் போது அந்த ஆடைகள் தரையில் படாமல் இருக்க பெண் உதவியாளர்கள் அந்த எஞ்சிய ஆடைகளைத் தூக்கிப் பிடித்தபடி அவர்களின் பின்னே வருவார்கள்.
தற்போது நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்ட போது அலுமினியம் மற்றும் கிரிஸ்டலில் உருவாக்கப்பட்ட நீளமான ஆடை ஒன்றை அணிந்து ரெட் கார்ப்பெட்டில் நடந்து வந்தார். அப்போது அவரது ஆடையை ஆண் உதவியாளர் ஒருவர் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தன.
அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து 'காஸ்டியூம் அடிமைகள்' என 'காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி கோபமாக பதிவிட்டுள்ளார். “காஸ்டியூம் அடிமைகள்' என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டுள்ளீர்களா ?. அவர்கள் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருப்பார்கள். இந்த புகைப்படத்தில் ஒரு ஆண் இருக்கிறார். இப்போதெல்லாம் நமது இந்தியாவில் பெண் பிரபலங்களிடமும் இதைப் பார்க்க முடியும். இப்படிப்பட்ட சங்கடமான பேஷனுக்காக நாம் ஏன் முட்டாள்களாகவும் பெரும் சுமையாகவும் மாறுகிறோம். எனது கருத்துக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது 'ஆடை அடிமைத்தனம்' என்ற கருத்தைப் பற்றியது. அதற்கு அவர் பொறுப்பல்ல, அவர் ஒரு மாடல், பேஷன் தூதுவர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.