புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
ஜோதிகா நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான 'ராட்சசி' படத்தை இயக்கிய கவுதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் பிரதாப் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். டி. இமான் இசை அமைக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில், அம்பேத்குமார் தயாரிக்கிறார். இப்படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படம் பற்றி கவுதமராஜ் கூறியதாவது: மரண தண்டனை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக நிறைவேற்றப்பட்டு வந்தது. சிலுவையில் அறைந்து கொன்றார்கள், தலையைவெட்டி கொன்றார்கள், யானையை மிதிக்க வைத்து கொன்றார்கள். அப்படி தமிழ்நாட்டில் இருந்த ஒரு முறைதான் கழுவேற்றுவது. கழுவேத்தி மரங்கள் இப்போதும் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் அதனை தெய்வமாக வணங்கி வருகிறார்கள். இப்போதும் கோழிகளை அந்த மரத்தில் பலிகொடுத்து வழிபாடு செய்கிறார்கள். இந்த வழிபாட்டின் பின்னணியை ஆய்வு செய்து அதனை இன்றைய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு உருவானதே இந்த படம். இதில் அருள்நிதி மூர்க்கன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு ஊரில் நல்லது கெட்டதில் பங்கேற்பவராக நடித்திருக்கிறார். படத்தில் கொஞ்சம் அரசியலும் பேசுகிறார். இந்த படத்திற்காக அவர் எடை கூடி பெரிய மீசை வைத்து நடித்திருக்கிறார். இது ஜாதி ரீதியான படம் அல்ல. சமூக நீதிக்கான படம் என்று சொல்லலாம். என்றார்.