இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
இஸ்லாமிய பின்புலத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி, புர்கா, பர்ஹானா படங்களை தொடர்ந்து தற்போது உருவாகி வருகிறது 'பாய்: ஸ்லீப்பர் செல்' என்கிற படம். இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே.ஆர்.எஸ் பிலிம்டாம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் கமலநாதன் புவன் குமார் கூறியதாவது: இன்று அரசியலில் செல்வாக்கு செலுத்துகிற ஒரு சக்தி வாய்ந்த கருவியாக மதம் இருக்கிறது. மதம் என்கிற கருவியை வைத்து மனிதர்களின் ஏழ்மை மற்றும் அவர்களின் விரக்தி என்கிற பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை மூளைச்சலவை செய்து ஒரு சித்தாந்தத்திற்கு அடிமையாக்கி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் கொடூரத்தைச் சிலர் செய்து வருகிறார்கள் அதைப்பற்றி இந்தப் படம் பேசுகிறது. படத்தின் ஒற்றை நோக்கம் மனிதாபிமானம் தான் மேலானது என்பதுதான்.
இந்தப் படத்தின் பிரதான பாத்திரங்களில் ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். படத்தின் திரைக்கதை வடிவம் முற்றிலும் புதிது, பார்வையாளர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட முயற்சிகள் நடந்துக் கொண்டு இருக்கின்றன. என்றார்.
இந்த படத்தின் போஸ்டரை இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான கே .ஏ.எம் .முகமது அபுபக்கர், கிறிஸ்தவ மதத்தின் சார்பில் பிஷப் டாக்டர் எஸ்.எம்.ஜெயக்குமார் ஆகிய மூவரும் வெளியிட்டனர்.
படத்தின் போஸ்டரில் மூன்று மதக் குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. நெற்றியில் பட்டை, தலையில் குல்லா, கையில் சிலுவை, பின்னணியில் வெடி பொருட்கள், பணம், துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இது சர்ச்சையை கிளப்பி வருகிறது.