இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
உலகின் மிகப்பெரிய திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியது. பிரான்சில் உள்ள பிரான்ஸ் ரிவியராவில் தொடங்கியுள்ள இந்த விழா வருகிற 28ம் தேதி வரை நடக்கிறது. இவ்விழாவில் தமிழ், மராத்தி, மலையாளம், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. மொத்தம் 600க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்தியா சார்பில் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் முருகன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளனர். இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் மாதவன், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி, கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர், திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்னர்.
விழாவில் மாதவனின் 'ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்' படம், இந்தியா சார்பில் திரையிடப்படுகிறது. மேலும் 'தம்பு' மலையாளப் படமும் திரையிடப்படுகிறது. 1978ல் வெளியான இப்படத்தில் நெடுமுடி வேணு, பரத் கோபி, ஜலஜா உள்ளிட்ட பலர் நடித்தனர். சிறந்த இயக்குனர், சிறந்த மலையாளப் படம் ஆகிய தேசிய விருதையும் பெற்றுள்ளது. மேலும், கோதாவரி, ஆல்பா பீட்டா காமா, பூம்பா ரைடு, துயின் மற்றும் ட்ரீ புல் ஆப் கிளிகள் ஆகியவை பிரான்சின் ஒலிம்பியா தியேட்டரில் திரையிடப்பட உள்ளது. மேலும், நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்ற பார்த்திபனின் இரவின் நிழல் படமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.
இன்று(மே 17) நடந்த சிவப்பு கம்பள வரவேற்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வேஷ்டி - சட்டை அணிந்து பங்கேற்றார். இதுதொடர்பான போட்டோவை பகிர்ந்து, ‛‛உலகப்புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற சிவப்புக் கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா குறித்து அமைச்சர் முருகன் விடுத்துள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது: வசுதைவ குடும்பகம் என்ற உத்வேகத்துடன் இந்தியா கேன்ஸ் திரைப்பட திருவிழாவின் 76-வது அத்தியாயத்தில் பங்கேற்றிருக்கிறது. இது ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற சக்திவாய்ந்த படைப்பு பொருளாதாரத்தின் அடிப்படையில், இந்தியாவின் தொன்மைவாய்ந்த கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியத் திரைப்படங்களின் தொன்மை மேம்பட்டு வருவதற்கு, இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற 'ஆர்ஆர்ஆர்' மற்றும் 'த எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' ஆகிய திரைப்படங்களே சாட்சி. இந்தியத் திரைப்படங்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் உலகளாவிய ஊடகங்களின் மேம்பாட்டுக்கும், கேளிக்கைத் துறைக்கும் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. 16 நாடுகளுடன் இணைந்து திரைப்படத் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்து, இது தொடர்பாக மேலும் 20 நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது, இந்திய திரைப்படங்களின் வளர்ச்சிக்கான செல்வாக்கை வெளிப்படுத்துவதாக இது அமைந்துள்ளது.
இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.