175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
இன்றைய 'பொன்னியின் செல்வன், பாகுபலி' படங்களுக்கெல்லாம் முன்னோடி 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் என்றால் மிகையாகாது. 65 ஆண்டுகளுக்கு முன்பாகவே அப்படி ஒரு பிரம்மாண்டத்தை திரையில் காட்டினார் பி.ஆர்.பந்துலு.
ஜி ராமநாதன் இசையில் சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், பத்மினி, எஸ் வரலட்சுமி, ராகினி, விகே ராமசாமி மற்றும் பலர் நடித்து அப்படம் 1959ம் ஆண்டு மே 16ம் தேதி வெளியானது. முழு நீள வண்ணத் திரைப்படமாக வெளிவந்து அன்றைய சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது இன்றைய சினிமா ரசிகர்களையும் வியக்க வைக்கும் ஒரு படைப்பு. 175 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா கண்ட படம்.
1960ம் ஆண்டு எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த 155 நாடுகள் பங்கேற்ற ஆசி ஆப்ரோ பட விழாவில் 3 விருதுகளை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு. அதில் சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த வெளிநாட்டுப் படம் ஆகிய விருதுகளை வென்றது. சிறந்த நடிகருக்கான விருது வென்று திரும்பிய சிவாஜிகணேசனை விமான நிலையத்திற்கே சென்று மாலை அணிவித்து வரவேற்றார் எம்ஜிஆர்.
100 முறைக்கும் மேல் நாடகமாக மேடை ஏறி ராஜாஜி, அண்ணாதுரை ஆகியோரால் பாராட்டு பெற்ற 'கட்டபொம்மன்' நாடகம்தான் பின்னர் படமாக உருவானது. சக்தி கிருஷ்ணசாமி இப்படத்திற்கு வசனம் எழுதினார்.
இப்படியெல்லாம் கூட ஒருவரால் நடிக்க முடியுமா என வீரபாண்டிய கட்டபொம்மனை கண்முன் நிறுத்தினார் சிவாஜிகணேசன். இத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படத்தின் வசனங்கள் பலருக்கும் மறக்காமல் இருக்கிறது. வெள்ளையத் தேவனாக ஜெமினி கணேசன், வெள்ளையம்மாளாக பத்மினி, ஜாக்சன் துரை ஆக சிஆர் பார்த்திபன் நடித்தார்கள்.
அந்தக் காலத்திலேயே இப்படி ஒரு படைப்பை எடுக்க முடிந்ததென்றால் அந்தக் கலைஞர்கள் இந்தக் காலத்தில் இருந்திருந்தால் எப்படிப்பட்ட படைப்புகளை எல்லாம் எடுத்திருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.