Advertisement

சிறப்புச்செய்திகள்

அதர்வாவின் டிஎன்ஏ படப்பிடிப்பு நிறைவு | விக்ரமார்குடு ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு | கவுதம் மேனன் படப்பிடிப்பில் சிபிஐ கதாசிரியரின் பட டிரைலரை வெளியிட்ட மம்முட்டி | நிவின்பாலியின் வீடியோ ஆல்பம் வெளியானது | மாற்றுத்திறனாளி ரசிகர் கொடுத்த சட்டை ; மறக்காமல் மம்முட்டி செய்த காரியம் | மோகன்லால் படத்தை 30 நிமிடம் வெட்டிவிட்டு ரீ ரிலீஸ் செய்யும் இயக்குனர் | 20 வருடத்திற்கு பிறகு ஜோடி நடிகருடன் மீரா ஜாஸ்மின் சந்திப்பு ; 2ஆம் பாகத்திற்காகவா ? | கூலி படத்தில் இணைந்த மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர்? | டாக்டர் ஆனார் திலீப்பின் மகள் | டொவினோ தாமஸ் பட தயாரிப்பாளர் பண மோசடி ; நீதிமன்றம் தடை உத்தரவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தோல்வியிலும் தயாரிப்பாளரை மட்டும் பாராட்டிய நாகார்ஜுனா மகன்

16 மே, 2023 - 11:47 IST
எழுத்தின் அளவு:
Akhil-says-thanks-to-Producer-even-movie-failure

நாகார்ஜுனா, அமலா நட்சத்திரத் தம்பதியினரின் மகன் அகில். தெலுங்கில் எட்டு வருடங்களுக்கு முன்பே கதாநாயகனாக அறிமுகமானவர். கடந்த எட்டு வருடங்களில் 5 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனாலும், சாதனைக்குரிய வெற்றியைப் பெற்று இன்னும் முன்னணி கதாநாயகர்களின் வரிசையில் இடம் பிடிக்கத் தடுமாறி வருகிறார்.

அவர் நடித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த 'ஏஜன்ட்' என்ற படம் படுதோல்வியைச் சந்தித்தது. படம் வெளியான சில நாட்களிலேயே படத்தின் தயாரிப்பாளரான அனில் சுங்காரா படத்தின் தோல்விக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். முழுமையான ஸ்கிரிப்ட் இல்லாமல் படப்பிடிப்புக்குச் சென்றோம், மொத்த பழியையும் தானே ஏற்கிறேன் என்றார்.

இந்நிலையில் அகில் நேற்று 'ஏஜன்ட்' படத்தின் தோல்வி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்தபடி படம் திரையில் வரவில்லை. உங்களுக்கு நல்ல படத்தைக் கொடுக்கத் தவறிவிட்டோம். படத்தின் தயாரிப்பாளர் அனில் அவர்களுக்கு சிறப்பு நன்றி, அவர்தான் எனக்குப் பெரும் ஆதரவு. மீண்டும் வலிமையுடன் திரும்பி வருவேன்,” என்று தயாரிப்பாளருக்கு மட்டும் நன்றி தெரிவித்துள்ளார்.

படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டியை அவர் முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டார். ஏற்கெனவே, படத்தின் தயாரிப்பளார் அறிக்கை விட்ட போதும் அதில் இயக்குனர் பெயர் இல்லை. எனவே, தயாரிப்பாளரும், நாயகனும் படத்தின் தோல்விக்கு இயக்குனர்தான் காரணம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

முழுமையான ஸ்கிரிப்ட் இல்லாமல் தயாரிப்பாளரும், நாயகன் அகிலும் எப்படி படப்பிடிப்பை ஆரம்பிக்க சம்மதித்தார்கள் என்றும் கேள்வி எழுகிறது. சுரேந்தர் ரெட்டி தெலுங்கில் கடைசியாக இயக்கிய ''துருவா (தனி ஒருவன் ரீமேக்), சைரா நரசிம்ம ரெட்டி” ஆகிய படங்களும் தோல்விப் படங்கள்தான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய், வெங்கட் பிரபு புதிய கூட்டணி உண்மையா...?விஜய், வெங்கட் பிரபு புதிய கூட்டணி ... 65வது ஆண்டில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' 65வது ஆண்டில் 'வீரபாண்டிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in