போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2000ம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்றார். கடந்த 2018ம் ஆண்டில் உலகளவில் அதிக சம்பளம் பெறுவர்களில் ஒருவரான பிரபல பாப் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்டு இப்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை மற்றும் அவரது தங்கையுமான பரினீதி சோப்ராவின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள இந்தியா வந்தார்.
தனது மாமியார் தன்னிடம் கூறிய ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார் பிரியங்கா. அது குறித்து அவர் கூறியதாவது: "கடந்த 2000ம் ஆண்டு லண்டனில் நான் உலக அழகிப் பட்டம் வென்றேன். அப்போது எனக்கு 18 வயது ஆகியிருந்தது. அந்த நிகழ்வு குறித்து என்னிடம் பேசிய என் மாமியார், “நீ வென்றபோது உன்னை நாங்கள் தொலைகாட்சியில் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. உலக அழகி போட்டியின் போது டி.வியில் நேரடி ஒளிபரப்பு செய்தனர். அந்த நிகழ்ச்சியை காண என்னுடன் நிக் ஜோனாசும் சேர்ந்து அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில், அவனுக்கு 8 வயது தான் இருக்கும்" என்று என்னிடம் கூறினார்.
இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.