திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் | சண்டை கலைஞர்களை தேர்வு செய்கிறது யூனியன் | சமுத்திரக்கனி நடிக்கும் 'திரு.மாணிக்கம்' | மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய தமன் குமார் | தலை பாரத்தை இறக்கி வைத்த சிவகார்த்திகேயன் | கமலும் அர்ஜுனும் லாலிபாப் தான் சாப்பிட்டார்களா ? துல்கர் பட இயக்குனர் கிண்டல் |
ராக்கெட்ரி படத்துக்கு பிறகு நயன்தாராவுடன் இணைந்து தி டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் மாதவன். அதையடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கும் படம் மற்றும் ஜி. டி. நாயுடு வாழ்க்கை வரலாறு படம் என தமிழில் தற்போது மூன்று படங்களில் நடிக்கிறார் மாதவன். இந்த நிலையில் அடுத்தபடியாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுடன் இணைந்து முதன் முறையாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் மாதவன். திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் மும்பையில் தொடங்க உள்ளது. மேலும் இந்த படத்தை கங்கனா ரணாவத் கதையின் நாயகியாக நடித்த குயின் என்ற படத்தை இயக்கிய விகாஸ் இயக்கயிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.