ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
நடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்து வந்த போது காதலிக்க தொடங்கியவர்கள் பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார்கள். இன்று(மே 11) அவர்கள் தங்களது 11வது திருமண நாளை கொண்டாடுகிறார்கள்.
மனைவி சினேகாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகர் பிரசன்னா, ஒரு பதிவும் போட்டு உள்ளார். அந்த பதிவில், ‛‛ஹாய் பொண்டாட்டி, இந்த சிறந்த நாளில் நான் சொல்ல விரும்புவது, என்னுடைய வாழ்க்கையில் பல சிறப்புகள் ஏற்பட்டு இருந்தாலும் உனது கையை பிடித்த பிறகு நான் நிறைய கற்றுக் கொண்டேன். உன்னுடன் பயணிக்கும் இந்த நாட்களுக்காக நன்றியுடன் இருப்பேன்.
எவ்வளவோ கஷ்டங்கள் சவால்களை சந்தித்து இருக்கிறேன். அப்போதெல்லாம் நீ அருகில் இருந்ததால் எந்த கஷ்டமும் என்னை எதுவும் செய்யவில்லை. உனது அன்பு என்னை வழி நடத்தி வருகிறது. என்னைச் சூழ்ந்துள்ள இருள் அனைத்தையும் விரட்டும் ஒளி நீயாகும். உன்னை எனது துணையாக பெற்றதற்கு மிகவும் நன்றி உடையவனாக இருக்கிறேன்.
நம்முடைய குழந்தைகள் விலை மதிப்புள்ள பரிசுகள். கடவுளின் ஆசீர்வாதத்தால் உன்னுடைய அன்பால் உன்னுடைய புன்னகையால் என் உலகத்தை நீ அற்புதமாக வைத்திருக்கிறாய். உனது கைகளை பிடித்துக் கொண்டு தொலைதூர நாடுகளுக்கும் புரியாத பாதைகளுக்கும் செல்ல வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். என்னை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காத உனது அன்பில் மீண்டும் ஓராண்டு கழிந்து உள்ளது. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என் அன்பே. என் கண்ணம்மா.
ஒவ்வொரு நொடியும் நம் சிறப்பாக வாழ்வோம். உன்னை நான் எப்போதும் காதலிக்கிறேன். நம்முடைய காதல் உயர்ந்ததாக இருக்கும் என்று கூறியிருக்கும் பிரசன்னா, நம்மைப் பற்றி மில்லியன் கணக்கில் வெளியான அந்த வதந்திகள் தவிடுபொடி ஆகட்டும். நாம் நம்முடைய வாழ்க்கையை முழுமையாக வாழ்வோம்''.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.