நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை தழுவி உருவாகும் இந்த படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கிருத்தி சனோன், லட்சுமணனாக சன்னி சிங், ராவணனாக சைப் அலிகான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் ஜூன் 16ல் 3டி தொழில் நுட்பத்தில் வெளியாகிறது. மே 9ம் தேதியான இன்று இந்த படத்தின் டிரைலரை 5 மொழிகளில் வெளியிட்டனர். டிரைலர் பார்த்த அனைவரும் பிரமாண்டமாய் இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக கடந்த அக்டோபர் 2 அன்று டீசர் வெளியான போது அதன் கிராபிக்ஸ் காட்சிகள் சரியாக இல்லை என கடும் விமர்சனம் எழுந்தது. அதையெல்லாம் கருத்தில் கொண்டு இப்போது டிரைலரை அனைவரும் பாராட்டும்படியாக வெளியிட்டுள்ளனர். வெளியான சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகள் டிரைலருக்கு கிடைத்துள்ளது.