ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடித்து இசையமைத்து வரும் திரைப்படம் வீரன். மரகத நாணயம் பட இயக்குனர் ஏ. ஆர். கே சரவணன் இயக்குகிறார். அதீரா ராஜ், முனீஸ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இதுஒரு சூப்பர் ஹீரோ மாதிரியான கதை. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வருகின்ற ஜூன் 2 அன்று உலகமெங்கும் வெளியாகும் என்று போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இப்படத்தை தமிழகமெங்கும் சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகின்றனர்.