25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே |
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சரும், நடிகமான உதயநிதி நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் மாமன்னன். வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் முதல் பார்வை ஜூன் மாதம் வெளியீடு என்ற போஸ்டர் உடன் அறிவித்தனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தில் வடிவேலு ரஹ்மான் இசையில் பாடல் ஒன்றை பாடுகிறார். இந்த பாடலை கவிஞர். யுகபாரதி எழுதியுள்ளார். தற்போது இந்த பாடல் உருவாகத்தில் உள்ள போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது. இப்பாடல் விரைவில் வெளியாகும் என இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.