கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் கங்குவா. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பத்துக்கு மேற்பட்ட கெட்டப்புகளில் சூர்யா நடித்து வரும் இந்த கங்குவா படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், விரைவில் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்காக சில மாதங்களாக பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பணிகள் முடிவடைந்து விட்டது. அதனால் விரைவில் இந்த பிரம்மாண்ட செட்டில் கங்குவா படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் படமாக உள்ளது.