தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா | இன்னும் 2 மாதம் டல் சீசன் : பெரிய படங்கள் வராத நிலை | என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் |

சர்ச்சையை ஏற்படுத்தி வரும் 'தி கேரளா ஸ்டோரி' படம் இன்று நாடு முழுவதும் வெளியாகிறது. மலையாள பெண்களை மதம் மாற்றி முஸ்லிம் பயங்கரவாதிகளாக்குகிறார்கள் என்கிற கதை களத்தை கொண்ட இந்த படத்திற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு போலீஸ் டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும் போதியளவில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். இந்த படத்தை பார்க்க வருவோர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பதற்றமான பகுதிகளில் போலீசார் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வன்முறை ஏற்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த படத்துக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ போஸ்டர்கள் ஒட்டப்பட்டால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பரவுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த படம் சென்னையில் 17 தியேட்டர்களில் ஒன்று மற்றும் இரண்டு காட்சிகளாக வெளியாகி உள்ளது.




