லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற படத்தை இயக்கிய செல்வராகவன், அதன் பிறகு பீஸ்ட், சாணிக்காயுதம், பகாசூரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக ஏற்கனவே தான் இயக்கிய 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
சோசியல் மீடியாவில் அவ்வப்போது தத்துவங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் செல்வராகவன், தற்போது ஒரு ரசிகர் டுவிட்டரில் கேட்ட கேள்விக்கு கொடுத்துள்ள பதில் கவனம் பெற்று வருகிறது. அதாவது, விவேக் ஒரு காமெடியில் சொல்லுவார். இயக்குனர் ஒவ்வொரு பிரேமையும் செதுக்கி இருக்கார். அப்படி ஒரு படம் இது. அப்படி ஒரு இயக்குனர் செல்வராகவன். அது ஒரு காலம் என்று பதிவிட்டு, காதல் கொண்டேன் படத்தின் பெயரை குறிப்பிட்டுளளார்.
ஆனால் இந்த பதிவில் செதுக்கி இருக்கிறார் என்ற வார்த்தையை செத்துக்கிருக்கார் என்று தவறுதலாக அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அதற்கு பதிலளித்து உள்ள செல்வராகவன், ஏன் நண்பா, நான் இன்னும் சாகவில்லை அல்லது ஓய்வையும் அறிவிக்கவில்லை. தற்போது எனக்காக சில நேரங்களை செலவழித்து வருகிறேன். விரைவில் திரும்பி வருவேன் என்று அவருக்கு டுவிட்டரில் பதில் கொடுத்துள்ளார் .