ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார். நடிகை திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சரித்திரம் கலந்த பேண்டஸி படமாக உருவாகிறது.
ஞானவேல் ராஜா தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கங்குவா படத்தை குறித்து முக்கிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதன்படி, " கங்குவா படத்தின் டீசர் தயாராகிவுள்ளது. இந்த டீசரை வரும் ஜூன் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளோம். இதற்காக டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த டீசருக்கு ஜந்து மொழிகளில் இருந்து முக்கிய பிரபலங்களின் குரலில் வாய்ஸ் ஓவர் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்" . என்று தெரிவித்துள்ளார்.




