நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் 'வாடிவாசல்' | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! |
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் முன்னணி நடிகர்களே சில காட்சிகளில் வந்து சென்றதாக ஒரு குறை ரசிகர்களிடத்தில் இருக்கிறது. அதே சமயம் சில காட்சிகளில் வந்தாலும் யார் இவர்கள் என சிலர் வியக்க வைத்துள்ளார்கள்.
அந்த விதத்தில் இளம் குந்தவை ஆக நடித்தவரும், இளம் நந்தினி ஆக நடித்தவரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்கள். இளம் நந்தினி ஆக நடித்தவர் யாரென்று ரசிகர்களுக்குத் தெரிந்த ஒன்றுதான். விக்ரம் நடித்த 'தெய்வத் திருமகள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன் தான் இளம் நந்தினி ஆக நடித்திருந்தார்.
அதுபோல 'இளம் குந்தவை' ஆக நடித்தவர் யார் என்று ரசிகர்கள் கூகுள் செய்ய ஆரம்பித்தனர். அவர்களுக்கு அந்த வேலையையும் வைக்காமல், “குட்டிக் குந்தவை', நம்ம நிலாப்பாப்பா மாதிரியே இருக்கு... என்று வியந்த நண்பர்களுக்கு... ஆம், அது நிலா பாப்பாதான்,” என்று பதிவிட்டுள்ளார் 'குட்டி குந்தவை'யின் அப்பா கவிதா பாரதி. நடிகரும், எழுத்தாளருமான கவிதா பாரதி, டிவி நடிகை கன்யா ஆகியோரது மகள் நிலா தான் இளம் குந்தவை ஆக நடித்திருப்பவர். சில காட்சிகளில் வந்தாலும் குந்தவைக்குரிய அந்த கம்பீரம், பார்வை என தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் நிலா.
தன் மகள் பற்றிய கவிதா பாரதியின் பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.