இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் | மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' | அதை மஞ்சுவாரியரிடமே போய் கேளுங்கள் ; நடிகை பார்வதி காட்டம் |
நயன்தாரா நடித்த அறம் என்ற படத்தை இயக்கியவர் கோபி நயினார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதையடுத்து தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் மனுசி என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். மேலும் தொடர்ந்து ஹீரோயின் சப்ஜெக்ட்டாக தான் இயக்கப் போவதாக கூறும் கோபி நயினார், இதையடுத்து ராதிகா சரத்குமாரை கதையின் நாயகியாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப் போறாராம். இந்த படத்தில் ராதிகாவுடன் சண்டக்கோழி, கர்ணன் என பல படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மனுஷி படத்தின் பணிகள் முடிந்ததும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படம் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா நடித்த செம்பி படத்தை போன்று ஒரு மாறுபட்ட கதையில் உருவாகிறது.