ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் உடனடியாக தனது 62வது படத்தில் நடிக்க இருந்தார் அஜித்குமார். ஆனால் அந்த படத்திற்க்காக விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக அதன் பிறகு அஜித்தின் 62வது படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாக கூறப்பட்டது. என்றாலும் அப்படம் குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் தற்போது அஜித், நேபாள நாட்டிற்கு பைக் ரைடிங் சென்றிருக்கிறார். என்றாலும் வருகிற மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் அவரது 62வது படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதோடு அஜித் பைக் ரைடிங்கை முடித்துவிட்டு திரும்பியதும் ஜூன் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.