'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ |

தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான சங்கம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இதன் தலைவராக தேனாண்டாள் முரளி உள்ளார். இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று (ஏப்ரல் 30) காலை 9 மணிக்கு துவங்கிய 5 மணிக்கு முடிந்தது.
சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள இந்தத் தேர்தல் மூலம் தலைவர், 2 துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தலைவர் பதவிக்கு தற்போது பதவியில் உள்ள முரளி ராமசாமி, மற்றொரு அணியில் இருந்து மன்னன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். துணை தலைவர் பதவிக்கு அர்ச்சனா கல்பாத்தி, கலைப்புலி சேகரன், ராஜேஸ்வரி வேந்தன், தமிழ்குமரன் மற்றும் விடியல் ராஜூ; செயலர் பதவிக்கு பி.எல்.தேனப்பன், கமீலாநாசர், எஸ்.கதிரேசன், கே.கதிரேசன், ராதாகிருஷ்ணன் போட்டியிடுகின்றனர். பொதுக்குழு உறுப்பினர்களாக, 26 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்; இதற்கு, நடிகை தேவயானி உட்பட, 77 பேர் போட்டியில் உள்ளனர்.

இந்தத் தேர்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகிய இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினர். இந்த தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாக்யராஜ், பூர்ணிமா, சுஹாசினி, அமீர், சசிகுமார், ஆர்.கே.செல்வமணி, தாணு, ராதாரவி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், தேவயானி, ஏ.ஆர்.முருகதாஸ், அமீர், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் தங்களின் ஓட்டுகளை பதிவு செய்தனர். ஓட்டுகள் நாளை காலை எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.