சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன். தமிழில் சீடன் போன்ற படங்களில் நடித்தார். பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி கேரளா சென்றிருந்தார். அந்த சமயத்தில் அவரை சந்தித்து பேசி உள்ளார் உன்னி முகுந்தன். பிரதமருடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து, "14 வயதில் உங்களை தூரத்தில் இருந்து பார்த்தேன். இப்போது உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. அதிலிருந்து மீளவில்லை. உங்களுடன் பேசிய நிமிடங்கள் என் வாழ்வின் சிறந்த நிமிடங்கள். நீங்கள் சொன்ன வார்த்தையை என்னால் மறக்கவே முடியாது. நன்றி சார்," என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.