ஸ்ரீதேவி மறைவுக்கு என்ன காரணம்? - போனி கபூர் விளக்கம் | மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் | நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி : விஷ்ணுமாயா கோவிலில் குஷ்பு நெகிழ்ச்சி | 1100 தியேட்டர்களில் வெளியாகும் '800' | ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'மார்க் ஆண்டனி' | 'கொலை' நடிகை மீனாட்சி சவுத்ரியை வலை வீசிப் பிடித்த விஜய் 68 | காவிரி தொடர்பான கேள்வி : ஜகா வாங்கிய ரஜினி | விஜய் 68வது படத்தில் இணைந்த சீனியர் நடிகர்கள் | ரஜினி 170வது படத்தில் ‛பாகுபலி' ராணா | தயாரிப்பாளராக உருவெடுத்த இயக்குனர் ராஜூ முருகன் |
லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இவானா. இதற்கு முன்பு இவர் நாச்சியார், ஹீரோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பிறகு பிஸியாகி வருகிறார் இவானா. தற்போது தமிழில் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் எல்ஜிஎம் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவை தொடர்ந்து இப்போது தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் இயக்குனர் சுகுமார் இருவரும் இணைந்து தயாரிக்கும் செல்பிஸ் படத்தில் கதாநாயகனாக தில் ராஜூவின் உறவினரான ஆசிஷ் நடிக்கிறார். இயக்குனர் காசி விஷால் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடிக்கிறார் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.