‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தனக்கென முத்திரையை பதித்தவர் இயக்குனர் எச்.வினோத். அதன்பின் கார்த்தி நடிப்பில் ‛தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கி இருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ச்சியாக 3 படங்களை இயக்கினார்.
இந்த நிலையில், தனது அடுத்த படத்தை தனுஷை வைத்து இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதற்கிடையே கமல்ஹாசனிடமும் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளார் எச்.வினோத். கமல்ஹாசன், ஷங்கர் இயக்கும் 'இந்தியன்-2' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இதன் படப்பிடிப்பு நடந்தது. இதையடுத்து கிளைமாக்ஸ் காட்சி மே மாதம் நடக்கிறது. அதோடு 'இந்தியன் 2' படத்தின் ஷுட்டிங் முடிகிறது.
இதனை முடித்ததும் எச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு நவம்பரில் துவங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்தை அடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகத் தெரிகிறது.