‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சபரிமலை அய்யப்பனின் மகிமையை சொன்ன 'மாளிகப்புரம்' மலையாள படம் போன்று தமிழில் உருவாகி வரும் படம் 'சன்னிதானம் பி.ஓ' இந்த படத்தை விவிகே என்டர்டெயின்மென்ட், சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் வி விவேகானந்தன், மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். ராஜீவ் வைத்யா இயக்குகிறார்.
தமிழ், மலையாளத்தில் தயராகும் இந்த படத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேசும், யோகி பாபுவும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்கள் தவிர கீர்த்தி சுரேசின் அம்மா மேனகா, வினோத் சாகர், வர்ஷா விஸ்வநாத், மித்ரா குரியன் ஆகியோரும் நடிக்கின்றனர். மேலும் இதில் கன்னட நடிகர் அஸ்வின் ஹாசன் மற்றும் தமிழ் திரைப்பட குழந்தை நட்சத்திரம் ராக்ஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சபரிமலையில் நடைபெற்று வருகிறது . இந்த படத்திற்காக சபரிமலை சென்றுள்ள யோகி பாபு விரதமிருந்து இந்த படத்தில் நடித்து வருகிறார். சபரிமலை சன்னிதானம், அங்கே பணிபுரியும் டோலி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸ் இவற்றை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாகிறது.




