8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் | பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி' | ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் | மருமகனுக்காக மாமா படம் தயாரிப்பாரா? | 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன மெமரி கார்டை கண்டுபிடிக்க சிறப்பு குழுவை நியமித்த ஸ்வேதா மேனன் |
மாநாடு, பத்துதல, வெந்து தணிந்தது காடு என தொடர் வெற்றிகளால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சிம்பு. வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஒரு பல்கலை கழகத்தில் நடந்தபோதும், பத்துதல பாடல் வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடந்தபோதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார். இது சிம்புவிற்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக தனது ரசிகர்மன்ற மாவட்ட நிர்வாகிகளை தனது வீட்டுக்கு அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுக்கு பிரியாணி விருந்தளித்த சிம்பு தன் கையாலேயே ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறினார். இதனால் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
ரசிகர் மன்ற நிர்வாகிகளிடையே பேசிய சிம்பு “மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்துங்கள், மக்களுக்கு நிறைய சமூக சேவைகள் செய்து அவர்களின் நன்மதிப்பை பெறுங்கள். அப்போதுதான் நமது எதிர்கால திட்டமிடலுக்கு அது சாதகமாக இருக்கும். பட வெளியீட்டின்போது எந்த பணி செய்தாலும் பாதுகாப்பை முக்கியமாக கருதுங்கள்” என்றார்.