கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் |
நடிகர் நாகார்ஜுனா, அமலா நட்சத்திர தம்பதியின் வாரிசான நடிகர் அகில் சுட்டிக்குழந்தை படத்திலிருந்து தனது திரையுலக பயணத்தை துவங்கிவிட்டார். தற்போது நாகசைதன்யா போல அவரும் இன்னொரு பக்கம் இளம் ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இதுநாள் வரை சாக்லேட் ஹீரோ கதாபாத்திரங்களில் நடித்து வந்த அகில் தற்போது முதல் முறையாக ஏஜென்ட் என்கிற படத்தில் இந்திய உளவாளி கதாபாத்திரத்தில் கட்டுமஸ்தான தோற்றத்தில் நடித்துள்ளார்.
சுரேந்தர் ரெட்டி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் மம்முட்டி மிக முக்கியமான அதிரடிப்படை கமாண்டோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 21ஆம் தேதி திரையரங்கிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அகில் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சமீபத்தில் விஜயவாடாவில் உள்ள ஒரு 172 அடி உயர கட்டிடத்தில் இருந்து ரோப் கட்டியவாறு குதித்து அங்கே கூடி இருந்த தனது ரசிகர்களையும் பொதுமக்களையும் உற்சாகப்படுத்தி வியப்பில் ஆழ்த்தியுள்ளார் அகில்.