ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்கிற பீரியட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முண்டந்துறை வனப்பகுதிகளில் நடைபெற்று வந்தது. பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது தற்காலிகமாக இந்த படத்தின் படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை நேரில் வந்து கண்டு களித்தார் தனுஷ். அவருடன் அவரது இளைய மகன் லிங்காவும் வந்திருந்தார். அதேசமயம் உள்ளூரில் இருந்த நடிகர் சிவராஜ்குமாரும் இந்த கிரிக்கெட் போட்டியை காண வந்தவர், நடிகர் தனுஷுடன் அமர்ந்து இந்த போட்டியை கண்டு ரசித்தார்