குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய்சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் மாமனிதன். இப்படத்தை மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் வரும் ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 27 வரையிலான நாட்களில் திரையிட உள்ளனர். இதற்காக சமீபத்தில் சீனு ராமசாமிக்கு, ரஷ்யன் மையம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
அந்த விழாவில் அவர் பேசியது, “ரஷ்யா நாட்டில் மாமனிதன் திரைப்படம் திரையிடப்பட இருப்பது, எனக்கு பெருமையாக உள்ளது. நான் சினிமாவிற்கு வந்த நோக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருகிறது. மாமனிதன் திரைப்படம் தியேட்டரில் வெளியானபோது, வெறும் 20 சதவீத பார்வையாளர்களை மட்டுமே பெற்றது. ஆனால், ஆஹா ஓடிடியில் மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது என குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இனி நான் விஜய் சேதுபதியுடன் இணையும் வாய்ப்பு கிடையாது. 12 ஆண்டுகளில் நான்கு படங்களை விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ளேன் . நான் இறந்தாலும் இந்த படங்கள் பேசும் என்று தெரிவித்துள்ளார்.