ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற 28ம் தேதி வெளிவருகிறது. தற்போது இதன் புரமோசன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொன்னியின் செல்வன் கீதத்தை (ஆன்தம்) இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார்.
இதன் வெளியீட்டு விழா நடந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 6000 மாணவர்களிடையே வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி கலந்து கொண்டனர்.
விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது: நான் இதுவரை கல்லூரிக்குச் சென்றதில்லை, எதிர்கால இந்தியாவாக இருக்கப்போகும் இங்குள்ள கூட்டத்தைப் பார்த்து பயப்படுகிறேன். ஆரம்பத்தில் இந்த கீதத்தை உருவாக்கியதன் பின்னணியில் எந்த உள்நோக்கமும் இல்லை. மணிரத்னம் சார் இந்த ஆல்பத்தை இயக்கும்படியாக ஒரு பாடலை விரும்பினார். அப்போதுதான் இந்த கீதம் உருவாகியது. என்றார்.