ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
அமெரிக்காவின் 100 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க 'டைம்' பத்திரிகை 2023ம் ஆண்டின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் 'ஐகான்ஸ்' பட்டியலில் ஷாரூக்கானும், 'பயோனிர்ஸ்' பட்டியலில் ராஜமவுலியும் இடம் பெற்றுள்ளனர். ராஜமவுலி பற்றி 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்த ஹிந்தி நடிகை ஆலியா பட் கூறியதையும் வெளியிட்டுள்ளார்கள். “பாகுபலி 2' படத்தின் பிரிவியூ காட்சியில்தான் ராஜமவுலியை நான் முதன் முதலாகச் சந்தித்தேன். படத்தைப் பார்த்து நாங்கள் அனைவரும் வியந்து போனோம். படத்தைப் பார்க்கும் போது எனக்கு 'ஓ மை காட்' இந்த இயக்குனருடன் பணியாற்றுவது எவ்வளவு கனவாக இருக்கும் எனத் தோன்றியது. அந்தக் கனவு நனவும் ஆனது.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் அவருடைய இயக்கத்தில் நடித்தது மீண்டும் பள்ளிக்குச் சென்ற உணர்வை ஏற்படுத்தியது. அவருக்கான ரசிகர்களுக்கு எப்படி சேவை செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார். ஹிட் அடிக்க என்ன செய்ய வேண்டும், எதை எடுக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். நான் அவரை 'கதை சொல்வதில் மாஸ்டர்' என்று அழைப்பேன். கதைகளைத் திறமையாகக் கையாள்வதிலும், தேவையற்றதைக் கைவிடுவதிலும் நேர்மையாக நேசிப்பார். அவர் நம்மை ஒன்று சேர்க்கிறார். இந்தியா பல்வேறு மக்கள், கலாச்சாராம், சரனை கொண்ட பெரிய நாடு. ஆனால், திரைப்படங்கள் மூலம் நம்மை ஒன்று சேர்த்து அவர் அதைப் பெற்றுவிடுகிறார்.
நான் ஒரு முறை அவரிடம் நடிப்பு பற்றி அட்வைஸ் கேட்டேன். “நீங்கள் எதைத் தேர்வு செய்தாலும் அதை அன்புடன் செய்யுங்கள். படம் வெற்றி பெறவில்லை என்றாலும், உங்கள் கண்களில் உள்ள அந்த அன்பை, ரசிகர்கள் உங்களிடம் பார்ப்பார்கள்,” என்றார்,” என ஆலியா குறிப்பிட்டுள்ளார்.
ஷாரூக்கான் பற்றி தீபிகா படுகோனே, “ஷாரூக்கானை முதன் முதலில் சந்தித்ததை என்னால் மறக்க முடியாது. கனவுகளுடனும், ஒரு சூட்கேஸுடனும் பெங்களூரிலிருந்து மும்பைக்கு வந்ததேன். அடுத்து எனக்குத் தெரிந்தது அவரது வீட்டில் நான் அமர்ந்திருந்தது, ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நான் நடிக்க பரிசீலிக்கப்பட்டேன். 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்களுக்கு இடையிலான உறவில் என்ன சிறப்பு என்று கேட்டால் அன்பு, நம்பிக்கை, ஒருவர் மீது மற்றவர் வைத்துள்ள மரியாதை.
எல்லா காலத்திலும் சிறந்த நடிகர்களில் ஒருவராக ஷாரூக்கான் அறியப்படுவார். ஆனால், உண்மையில் அவரை வேறுபடுத்துவது அவரது மனம், அவரது வீரம், அவரது தாராள மனப்பான்மை என பட்டியல் நீளும். அவருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றிய ஆழ்ந்த அக்கறை கொண்ட ஒருவருக்கு 150 வார்த்தைகளில் அவரது பெருமையச் சொல்லிவிட முடியாது,” எனத் தெரிவித்துள்ளார்.