மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? |
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 42 வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10க்கும் மேற்பட்ட வேடங்களில் சூர்யா நடிக்கும் இந்த படம் 13 மொழியில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு அக்னீஸ்வரன் என்று டைட்டில் வைக்க சிறுத்தை சிவா முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனபோதிலும் அதை படக் குழு உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் இப்படத்தை தயாரிக்கும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சூர்யா 42 வது படத்தின் டைட்டில் குறித்து ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், வருகிற ஏப்ரல் 16ஆம் தேதி காலை 9 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த டைட்டிலின் முதல் எழுத்து கே என்ற எழுத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்க, முக்கிய வேடத்தில் யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.