கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் |

‛இன்று நேற்று நாளை' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ரவிக்குமார் கடந்த 2016ல் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்ற படத்தை இயக்குகிறார் என அறிவிப்பு வெளியானது. 2018ல் இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பீர்த் சிங் , இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டு பிரமாண்டமாக படப்பிடிப்பு தொடங்கியது. அதன் பிறகு படப்பிடிப்பு நிறைவு பெற்றும் ஒரு சில காரணங்களால் படம் கிடப்பில் போடப்பட்டது. ஏலியன் தொடர்பான கதை என்பதால் படத்தில் நிறைய கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால் பட வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இப்போது இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சி பணிகள் ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதனால் படத்தை இந்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இப்படம் தீபாவளிக்கு வெளியானால் தனுஷின் கேப்டன் மில்லர், கார்த்தியின் ஜப்பான் படங்களுடன் மோதும் என்கிறார்கள்.




