படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
'வீர சிம்ஹா ரெட்டி' படத்திற்கு பிறகு என்.டி.பாலகிருஷ்ணா நடிக்கும் அவரது 108வது படத்தை ரவிபுடி இயக்குகிறார். இன்னும் டைட்டில் வைக்காத இந்த படத்தில் காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அவரது தங்கையாக வளர்ந்து வரும் இளம் நடிகை லீலா நடிக்கிறார். இவர்கள் தவிர 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த ஹனிரோஸ் இந்த படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர நடிகை பிரியங்கா ஜவால்கரும் இணைந்துள்ளார். தமன் இசையில் உருவாகும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
தமிழில் 'காந்தர்வன்' உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த ஹனிரோஸ் மலையாளத்திலும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்த நிலையில் அவர் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்ததும் தெலுங்கில் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளார். இதற்கு காரணம் பாலகிருஷ்ணா அவருக்கு அளித்து வரும் ஆதரவு என்கிறார்கள்.
'வீர சிம்ஹா ரெட்டி' படத்தின் புரமோசன் பணிகள், வெற்றி விழாக்களில் பாலகிருஷ்ணா ஹனிரோசுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தெலுங்கு திரையுலகம் ஆச்சர்யத்துடன் பார்த்தது. இப்போது தனது அடுத்த படத்திலும் ஹனிரோசுக்கு வாய்ப்பளித்திருக்கிறார் பாலகிருஷ்ணா.