10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

1997ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் மருதநாயகம். இது அவரது கனவு படமும் கூட. ஆனால் 40 நிமிட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அந்த படம் நிறுத்தப்பட்டது. அப்படத்தின் பூஜை நிகழ்ச்சியின் போது இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்டார் . அதோடு அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பலரும் அந்த பூஜையில் பங்கேற்றார்கள்.
இந்த நிலையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மருதநாயகம் படத்தை தூசி தட்டப் போகும் கமல்ஹாசன், அதில் தனக்கு பதிலாக விக்ரமை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். என்றாலும் கமல் ஏற்கனவே நடித்த 30 நிமிட காட்சிகளும் அப்படத்தில் இடம்பெறுப் போகிறது. அதற்கு தகுந்தார் போன்று திரைக்கதையை அமைக்க திட்டமிட்டுள்ளாராம் கமல்ஹாசன்.
சமீபகாலமாக பாகுபலி, பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவதால் மருதநாயகத்தையும் வெளியிடும் ஆர்வம் கமல்ஹாசனுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.