விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' | பிரதமர் ரசித்த திருவாசக பாடல்: ஜனவரி 22ல் வெளியிடுகிறார் ஜி.வி.பிரகாஷ் | மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி |

அமெரிக்க நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்திய யுவன் சங்கர் ராஜா, சமீபத்தில் மலேசியாவில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினார். இதை தொடர்ந்து அடுத்ததாக அவர் ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்சு மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்.
"ஹை ஆன் யுவன் - லைவ் இன் ஐரோப்பா" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, ஏப்ரல் 1 முதல் 7 வரை ஓபர்ஹவுசன் (ஜெர்மனி), பாரிஸ் (பிரான்சு) மற்றும் லண்டன் (இங்கிலாந்து) ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் சங்கர் மகாதேவன், ஹரிசரண், பிரேம்ஜி மற்றும் ஆண்ட்ரியா ஜெரிமியா, ஹரிசரண், திவாகர், ராகுல் நம்பியார், ரஞ்சித், விஜய் யேசுதாஸ், சாம் விஷால், டிஜே, அஜய் கிருஷ்ணா, எம்.சி.சனா, ஆலாப், தன்வி ஷா, ரக்ஷிதா, பிரியங்கா, ஹரிப்ரியா, விஷ்ணுபிரியா, அனுஷ்யா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முன்னணி கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.




