தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்கள் வெளியானது. இவர்கள் கூட்டணியில் வெளியாகும் பாடல்கள் பெரும்பாலும் ஹிட்டாகிவிடும். தற்போது ராம் இயக்கியுள்ள 'பறந்து போ' படத்தில் யுவன் இசையமைக்கவில்லை. சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
இதுபற்றி இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ராம் கூறியதாவது, “ நானும் நிறை குறைகள் இருக்கக்கூடிய சாதாரண மனிதன் தான். யுவன் ரசிகர்களுக்கு ஒரு விஷயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு தினமும் கெட்ட வார்த்தையில் மெசேஜ் வருகிறது. முதலில் இந்த படத்துக்கு யுவன் தான் இசையமைப்பதாக இருந்தது. அதற்கான முன்பணமும் தந்தோம். திடீரென்று மதன் கார்க்கி, இப்படத்தில் அதிக பாடல்கள் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்றார்.
அந்த நேரத்தில் திரைப்பட விழாவிற்கு வேறு படத்தை அனுப்ப வேண்டிய சூழல் இருந்தது. அந்தச் சமயத்தில் வேறு சில படங்களில் யுவன் பிஸியாக இருந்தார். இதனால் மட்டுமே பாடல்களுக்கு அவரால் இசையமைக்க முடியாமல் போனது. அப்போது, பின்னணி இசையை நான் செய்துக் கொண்டிருக்கிறேன் என்று யுவன் கூறினார். இதனைத் தொடர்ந்து தான் சந்தோஷ் தயாநிதி இப்படத்துக்கு வந்து பாடல்களை இசையமைத்து தந்தார்” என ராம் கூறினார்.